பூ விற்கும் பெண் தொலைத்த 25,000 ரூபாய்.., தூய்மை பணியாளர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
பூ விற்கும் வியாபாரி தவறவிட்ட ரூ.25000 -யை தூய்மை பணியாளர்கள் எடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்கள் செய்த செயல்
தமிழக மாவட்டமான சென்னை, திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு, அஸ்வினி என்பவர் பூக்கடை நடத்தி வந்துள்ளார்.
அப்போது அவர், தான் சேர்த்து வைத்திருந்த ரூ.25000 -யை தொலைத்து விட்டு தேடி வந்துள்ளார். இந்த பணமானது தூய்மை பணியாளர்களான நீலாவதி, தேவி ஆகிய இருவர்களின் கண்ணில் தென்பட்டுள்ளது.
பின்னர், பணத்தை எடுத்து அதன் உரிமையாளரான பூ வியாபாரி அஸ்வினியிடம் கொடுத்துள்ளனர். அதற்கு இரு கைகளையும் கூப்பி அவர்களுக்கு அஸ்வினி நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர்களின் நேர்மையை பாராட்டும் விதமாக சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "வணக்கம் சென்னைமக்களே, திருவல்லிக்கேணியில் கோவில் விழாவின்போது பூக்கடை உரிமையாளரான அஸ்வினி ரூபாய் 25,000 ரொக்க பணத்தை தொலைத்துவிட்டார்.
அதனை தூய்மை பணியாளர்களான நீலாவதி மற்றும் தேவி ஆகியோர் மீட்டு உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர்" என்று கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |