IT வேலையை விட்டு 100 ஏக்கர் நிலத்தில் முழுநேர விவசாயம்.., பல கோடிகளில் சம்பாதிக்கும் இளைஞர்
மன நிறைவுக்காக அதிக சம்பளம் கிடைக்கும் ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்ட இளைஞரின் வருமானம் தற்போது பல கோடிகளில் உள்ளது.
யார் அவர்?
இந்திய மாநிலமான ஹரியானவைச் சேர்ந்த இளைஞர் சந்தீப் சவுத்ரி (Sandeep Chaudhary). இவர் ஐடி துறையில் இருந்து நல்ல ஊதியம் பெற்றாலும் இவருக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. இவரது தந்தை ஒரு விவசாயி.
சிறு வயதில் இருந்து விவசாயம் சார்ந்த விடயங்களை கேட்டு வளர்ந்த சந்தீப்புக்கு, வேளாண்மை சார்ந்த தொழிலில் ஈடுபட்டால் மன நிம்மதி கிடைக்கும் என முடிவு செய்தார்.
அமைரா ஃபார்ம்ஸ் (Amyra Farms)
கடந்த 2022 -ம் ஆண்டு ஐடி வேலையை விட்ட Sandeep Chaudhary, பெங்களூருக்கு அருகே சிக்மங்களூரில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, Amyra Farms என்ற வேளான் சார்ந்த ஸ்டார்ட் அப்-ஐ தொடங்கினார். இவர் தன்னுடைய நிலத்தில் எந்தவொரு ரசாயனத்தையும், பூச்சிக்கொல்லி மருந்தையும் பயன்படுத்தவில்லை.
இவர், மனிதர்களுக்கும், இயற்கைக்கும் எந்தவொரு தீங்கு விளைவிக்காத பொருட்களை தான் நிலத்தில் பயன்படுத்துகிறார். இவர் தனது நிலத்தில் காஃபி, வெண்ணிலா, மிளகு, கிராம்பு ஆகியவற்றை விளைவிக்கிறார்.
அதோடு, மாட்டு பண்ணை, தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். மாட்டு பண்ணை மூலம் தனது நிலத்திற்கு உரம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். ரூ.3 கோடியில் தொடங்கப்பட்ட Amyra Farms -ன் தற்போதைய மதிப்பு ரூ.9 கோடி ஆகும்.
ஆரம்பத்தில், அமேசான், பிளிப்கார்ட்டில் விற்பனை செய்து வந்தவர், தற்போது தனி இணையதளம் உருவாக்கி விற்பனை செய்கிறார்.
தற்போது, கடந்த ஆண்டு பெங்களூருவில் இரண்டு காபி கடைகளையும் திறந்துள்ளார். மேலும், முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாகவும் சந்தீப் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |