சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கிரிக்கெட் வீரர் விடுதலை! குற்றமற்றவர் என தண்டனை ரத்து
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சேன் துஷ்பிரயோக வழக்கில் குற்றமற்றவர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை, நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சேன் (Sandeep Lamichhane) துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 2,00,000 இழப்பீடு உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து லாமிச்சேன் சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இது மீதான விசாரணை பதான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில் லாமிச்சேன் குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவரது 8 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |