வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச்ல்! மீண்டும் தமிழக வீரர் அஸ்வினை சீண்டிய பிரபலம்
அஸ்வின் மீது ரவி சாஸ்திரி கொடுத்த விளாசல் சரி தான் என்பது போல முன்னாள் செலக்டர் சரந்தீப் சிங் பேசியுள்ளார்.
குல்தீப் யாதவ் வெளிநாட்டின் சிறந்த இந்திய ஸ்பின்னர் என்று ரவி சாஸ்திரி கூறியது தன்னை நொறுக்கி விட்டதாக அஸ்வின் கூறியதற்கு ரவி சாஸ்திரி இறுமாப்பின் உச்சத்தில் அது அஸ்வினை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ரவி சாஸ்திரி கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் செலக்டர் சரந்தீப் சிங்.
அவர் கூறுகையில், அஸ்வின் - ரவிசாஸ்திரி கூறியதை தவறாக புரிந்து கொண்டார். ரவி கூறியது என்னவெனில் குல்தீப் ஒரு வித்தியாசமான பவுலர் இதனால் வெளிநாடுகளில் அவரது சக்சஸ் ரேட் அதிகம். என்ற பொருளில் ரவி சாஸ்திரி கூறியதாகத் தெரிவித்தார்.
நானும் அப்போது இருந்தேன். குல்தீப் யாதவ் பவுலிங் ஸ்டைல் வித்தியாசமானது எனவே வெளிநாடுகளில் அவர் நம்பர் 1 ஸ்பின்னர் என்றுதான் சொன்னார் ரவி சாஸ்திரி. ஆம் சாஸ்திரி சொன்னது சரிதான், அவர் வேலை வெண்ணைத் தடவி பேசுவது அல்ல என கூறியுள்ளார்.