பல நூற்றாண்டுகளாக இருந்த மர்ம தீவு திடீரென மாயமானது எப்படி? நிபுணர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு தற்போது மாயமாகி உள்ளது. உலக மேப்களிலும், கூகுள் மேப்பிலும் காட்டப்பட்ட இந்த தீவு, இப்போது உண்மையில் இல்லை என்று கூறப்படுகிறது.
சாண்டி தீவு என்று பெயரிடப்பட்ட தீவு பல ஆண்டுகளாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவு1774 ஆம் ஆண்டு முதல் தென் பசிபிக் பகுதியில் நியூ கலிடோனியாவிற்கு அருகில் உள்ளதாக கூறப்படுகின்றது.
சாண்டி தீவை செப்டம்பர் 15, 1774 ஆம் ஆண்டில் கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து கிழக்கு பவளக்கடலின் வரைபடத்தில் சேர்த்தார்.
இந்த தீவு 24 கிமீ நீளமும் 5 கிமீ அகலமும் கொண்டதாக நம்பப்பட்டது. 1800களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி வரைபடங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்கள் கழித்து இந்த தீவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தென் சர்வேயர் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாண்டி தீவு இல்லை என்று அறிவித்தனர். இதையடுத்து கேப்டன் குக் இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை 100 சதவீதம் உறுதியாக யாராலும் சொல்ல முடியாது.
அந்த தீவு கடல் பியூமிஸ் எனப்படும் மிதக்கும் படிக கற்களாக இருந்திருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. இவை நீருக்கடியில் எரிமலைகளிலிருந்து வெடித்துச் சிதறி மிதக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.