ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சங்கக்கார நியமனம்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது.
தலைமை பயிற்சியாளரான சங்கக்கார

2024 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட், கடந்த செப்டம்பர் பதவியில் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.
🚨 Official: Director of Cricket Kumar Sangakkara will also take charge as Head Coach for IPL 2026 pic.twitter.com/4IRWoQM3mj
— Rajasthan Royals (@rajasthanroyals) November 17, 2025
இந்நிலையில், திய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 முதல் 2024 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் வரை குமார் சங்கக்காரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
அதன் பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்ட அவர், மீண்டும் தற்போது தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 வெற்றி மற்றும் 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது.

ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதல் ஐபிஎல் தொடரான 2008 ஆம் ஆண்டில் மட்டும் கோப்பை வென்றது.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவரான சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகிய இருவரும் CSK-வில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்திற்கு முன்னதாக ரவீந்திர ஜடேஜா (டிரேட்) , சாம் குர்ரான் (டிரேட்) , யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ஷுபம் துபே, யுத்வீர் சிங், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் மஹாபாகா ஆகிய வீரர்களை தக்க வைத்துள்ளது.
சஞ்சு சாம்சன்(டிரேட்), நிதிஷ் ராணா(டிரேட்), வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குணால் ரத்தோர், அசோக் சர்மா ஆகியோரை விடுவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.16.05 கோடியுடன் மினி ஏலத்தில் பங்குபெற உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |