மக்கள் எதிரி அல்ல...இதை பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது! சங்கக்கார அறிக்கை
மக்கள் எதிரி அல்ல என்று என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை நெருக்கடி குறித்து சங்கக்கார வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையர்கள் கற்பனை செய்ய முடியாத ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் மற்றும் குடும்பங்கள் நாளுக்கு நாள் விரக்தியுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு கடினமாகி வருகிறது.
தேவையான தீர்வை கேட்டு மக்கள் போராடி வருகின்றனர்.
ரஷ்யாவை தடுக்க அணு ஆயுதங்களை நிலைநிறுத்த தயார்! பிரபல ஐரோப்பிய நாடு அதிரடி
சிலர் இந்த போராட்டங்களுக்கு வெறுப்புடனும், கோபத்துடனும் எதிர்வினையாற்றி வருகின்றனர், மற்றவர்கள் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
"The people are not an enemy. Sri Lanka is its people..."- Kumar Sangakkara on social media. #SriLanka #lka @KumarSanga2 pic.twitter.com/wrlft0952W
— NewsRadio - TNLRN (@newsradiolk) April 3, 2022
மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது தான் சரி, தேவையில்லாத நபர்களை மற்றும் அரசியல் கொள்கைகளை புறந்தள்ள விட்டு இலங்கையின் நலனுக்காக செயல்பட வேண்டும்.
மக்கள் எதிரி அல்ல, மக்கள் தான் இலங்கை. நேரம் வேகமாக கடந்துக் கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களது எதிர்காலமும் பாதுகாக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.