ராஜஸ்தான் ராயல்ஸை ஏமாற்றி வேறொரு அணிக்கு ஆடிய சாம் கரன் - சங்கக்கார அதிருப்தி
சாம் கரன் மீது RR அணி பயிற்சியாளர் சங்ககாரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சாம் கரன் விலகல்
2020, 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் CSK அணியில் இருந்த சாம் கரன், 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ஜடேஜாவுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் டிரேடிங் மூலம் வாங்கப்பட்டார்.

காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரிலிருந்து சாம் கரன் விலகுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு மாற்று வீரராக இலங்கை வீரர் தசுன் ஷனக்கா அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சங்கக்காரா அதிருப்தி
இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்த பின்னர் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா சாம் கரன் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதில் பேசிய அவர், "சாம் கரணுக்கு இந்த சீசனில் விளையாட முடியாத காயம் ஏற்பட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர் சர்ரே அணிக்காக 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடுவதை நான் பார்த்ததாக நினைக்கிறேன். எனவே அது ஏமாற்றமளித்தது.
அவர் இங்கே எங்களுக்காக விளையாடியிருந்தால் நாங்கள் மிகவும் விரும்பியிருப்போம். ஆனால், எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக தசுன் ஷனகா இருந்தது ஒரு நல்ல விடயம் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |