துயரமான சம்பவம், அருமையான நண்பரை இழந்துவிட்டேன்! குமார் சங்ககரா
* ருடி கோர்ட்ஸர் 209 ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்து சாதனை படைத்தவர்
* உண்மையில் ருடி கோர்ட்ஸர் விளையாட்டை நேர்மையாக விரும்பினார் என குமார் சங்ககரா குறிப்பிட்டார்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நடுவர் ருடி கோர்ட்ஸர் கார் விபத்தில் பலியானது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
Twitter
தென் ஆப்பிரிக்க நடுவர் ருடி கோர்ட்ஸர்(73) கோல்ப் விளையாட தனது இரு நண்பர்களுடன் சென்றுள்ளார். அதன் பின்னர் தலைநகர் கேப்டவுனில் இருந்து திரும்பும் வழியில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Getty Images
அவரது மறைவிற்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககரா தனது வெளியிட்டுள்ள பதிவில்
'ருடி கோர்ட்ஸரை துயரமாக இழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னவொரு அருமையான நண்பர் மற்றும் நடுவர். உண்மையில் அவர் விளையாட்டை நேர்மையாக விரும்பினார். அவருடன் மதுபான விடுதியில் பலர் பீரை பகிர்ந்திருக்கிறார்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் நண்பரே' என தெரிவித்துள்ளார்.
Saddened at the tragic loss of Rudi Koertzen. What a wonderful friend and umpire. Honest, forthright and loved the game. Shared many a beer at the bar talking cricket with him. RIP my friend.
— Kumar Sangakkara (@KumarSanga2) August 9, 2022
ருடி கோர்ட்ஸர் 209 ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்து சாதனை படைத்தவர். மேலும் அவர் 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்த மூவரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.