மேக்ஸ்வெல் கிரிக்கெட்டின் அபூர்வம்: கேலியாக விமர்சித்த முன்னாள் வீரர்
க்ளென் மேக்ஸ்வெல் அபூர்வமாகதான் நல்ல ஆட்டத்தை ஆடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிண்டல் செய்துள்ளார்.
க்ளென் மேக்ஸ்வெல்
நடப்பு ஐபிஎல் தொடரில் அவுஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
ஆனால் ஓட்டங்கள் எடுக்க தடுமாறி வரும் அவர், நேற்றையப் போட்டியில் 21 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரது துடுப்பாட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
வால் நட்சத்திரம்
அவர் கூறுகையில், "ஹேலி வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி வருகிறது. அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியில் இருந்து தெரியும். இது கடைசியாக 1986யில் காணப்பட்டது.
அது அடுத்ததாக 2061யில் காணப்படும். அதைப்போலவே, க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) 75 ஆட்டங்களில் ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடுகிறார். அவர் கிரிக்கெட்டின் ஹேலி வால் நட்சத்திரம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |