டி20யில் 237 ஓட்டங்கள் இலக்கு: எரிமலையாய் வெடித்த சஞ்சு சாம்சன்..கடைசி பந்தில் வெற்றி
கேரளா கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ஓட்டங்கள் விளாச, கொச்சி ப்ளூ டைகர்ஸ் அபார வெற்றி பெற்றது.
143 ஓட்டங்கள்
கிரீன்ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், ஏரிஸ் கொல்லம் சைலர்ஸ் மற்றும் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கொல்லம் அணி 5 விக்கெட்டுக்கு 236 ஓட்டங்கள் குவித்தது. விஷ்ணு வினோத் 94 (41) ஓட்டங்களும், சச்சின் பேபி 91 (44) ஓட்டங்களும் விளாசினர்.
விஷ்ணு மற்றும் சச்சின் கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 66 பந்துகளில் 143 ஓட்டங்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் சரவெடி
பின்னர் களமிறங்கிய கொச்சி அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சரவெடியாய் வெடித்தார். சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய சாம்சன் 42 பந்துகளில் சதம் விளாசினார்.
அவர் 51 பந்துகளில் 121 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 7 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
முகமது ஆஷிக் ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்கள் விளாச, கொச்சி அணி கடைசி பந்தில் 237 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |