CSKவில் இணைந்த சஞ்சு சாம்சன் - ஜடேஜாவுடன் ராஜஸ்தான் செல்லும் மற்றொரு வீரர்
சஞ்சு சாம்சன் ஜடேஜா டிரேடிங் செய்யப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பை CSK வெளியிட்டுள்ளது.
CSKவில் இணைந்த சஞ்சு சாம்சன்
டிசம்பர் 16 ஆம் திகதி ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில்,10 அணிகளும் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்துள்ளது.
இதனிடையே வீரர்களை டிரேடிங் மூலம் அணிகள் பரிமாற்றம் செய்து வருகின்றன.

இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) அணித்தலைவர் சஞ்சு சாம்சன் வர உள்ளதாகவும், அவருக்கு மாற்றாக CSK வீரர் ரவீந்திர ஜடேஜா RR அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், டிரேடிங் மூலம் சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கியதை CSK அணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
SANJU SAMSON IS YELLOVE. 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2025
Anbuden welcome, Chetta!🦁 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/uLUfxIsZiU
சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் குரானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழங்கியுள்ளது.
Warnie found his Rockstar in 2008. Rajasthan gets him back today. 💗 pic.twitter.com/mIY8y0HRqT
— Rajasthan Royals (@rajasthanroyals) November 15, 2025
காசி விஸ்வநாதன் கருத்து
இது குறித்து பேசிய CSK நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன், "ஒரு அணியின் பயணத்தில் மாற்றம் என்பது ஒருபோதும் எளிதானது அல்ல. 10 வருடங்களுக்கும் மேலாக அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றுவது, அணியின் வரலாற்றில் நாங்கள் எடுத்த கடினமான முடிவுகளில் ஒன்றாகும்.

சாம் கரன் அணியை அணியிலிருந்து நீக்குவது மிகவும் சிரமமான முடிவுகளில் ஒன்றாகும். ஜடேஜா மற்றும் கரண் இருவருடனும் பரஸ்பர புரிதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
𝘚𝘢𝘮 gulaabi, sheher gulaabi 💗
— Rajasthan Royals (@rajasthanroyals) November 15, 2025
Welcome home, @CurranSM 🏠 pic.twitter.com/Ft5Kh51zEw
ஜடேஜாவின் அசாதாரண பங்களிப்புகளுக்கும் அவர் விட்டுச் சென்ற மரபுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஜடேஜா மற்றும் கரண் இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.
சஞ்சு சாம்சனையும் நாங்கள் வரவேற்கிறோம், அவருடைய திறமைகளும் சாதனைகளும் எங்கள் லட்சியங்களை நிறைவு செய்கின்றன. இந்த முடிவு மிகுந்த சிந்தனை, மரியாதை மற்றும் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
CSK அணியில் ஜடேஜா வரலாறு
2012 முதல் CSK அணியில் விளையாடி வரும் ஜடேஜா, 2018, 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் கோப்பை வென்ற போது அணியில் இருந்தார்.

2023 ஐபிஎல் தொடரின், இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுத்து, ஜடேஜா CSK அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.
CSK அணிக்காக, 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். மேலும் 2300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

2020, 2021 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் CSK அணியில் இருந்த சாம் கரான், 28 போட்டிகளில் விளையாடி 356 ஓட்டங்கள் மற்றும் 23 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2013 முதல் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2022 ஐபிஎல் தொடரில், இவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு சென்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |