வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகைக்கு ஏலம்போன சஞ்சு சாம்சன்
கேரள கிரிக்கெட் லீக்கில் கொச்சி அணி சஞ்சு சாம்சனை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் (Sanju Samson) ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவராக விளையாடி வருகிறார்.
2025 சீஸனின் முதல் மூன்று போட்டிகளில் ரியான் பராக்கை அணி நிர்வாகம் அணித்தலைவராக விளையாட வைத்தது.
இதனைத் தொடர்ந்து, பாரக்கையே அணித்தலைவராக நியமிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக அதிருப்தியில் உள்ள சாம்சன் CSK அணிக்கு செல்வதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
ரூ.26.80 லட்சத்திற்கு
இந்த நிலையில், KCL எனும் கேரளா கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார்.
கொச்சி ப்ளூ டைகர்ஸ் (Cochin Blue Tigers) எனும் அணி அவரை ரூ.26.80 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதன்மூலம் KCL வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையை சாம்சன் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |