ரசிகரின் போனில் பேசிய சஞ்சுசாம்சன் - வைரலாகும் வீடியோ!
செல்ஃபி எடுக்கும்போது ரசிகரின் போனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சுசாம்சன் பதிலளித்து பேசினார்.
முதலிடத்தில் முன்னேறிய ராஜஸ்தான் அணி
10 அணிகள் பங்கேற்று விளையாடும் 16-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து தனது 2வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஒரு வாரத்தில் கொஞ்சம் போராடி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளிடம் தோல்வியை சந்தித்தது.
நேற்று நடைபெற்ற போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான அணியைத் தோற்கடித்ததால் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. ஐசிசி வெளியிட்ட புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ரசிகரிடம் போனில் பேசிய சஞ்சுசாம்சன்
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு, ரசிகர்களை சஞ்சுசாம்சன் சந்தித்தார். அப்போது, ரசிகரின் செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்தார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ரசிகரின் போனிற்கு அழைப்பு வர, கேப்டன் சஞ்சுசாம்சன் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அந்த சமயம் சுற்றி இருந்த ரசிகர்கள் சஞ்சுசாம்சனை ‘ஸ்வீட்’ என்று அழைத்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#RajasthanRoyals’ #SanjuSamson answers fan's phone while taking selfie, people call his gesture ‘sweet’#viral #Trending #IPL2023 #IPL #Cricket pic.twitter.com/ec6tuk5SZV
— HT City (@htcity) April 28, 2023