நானும் சராசரி பெண் தான்... பொதுமக்கள் முன்பு கண்ணீர் விட்ட பின்லாந்து பிரதமர் மரின்
தமது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை அளித்துள்ளது - தாமும் ஒரு சராசரி பெண் தான்
தனிப்பட்ட வாழ்க்கை பகிரங்கப்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டார்
கடந்த ஒரு வாரத்தில் தம்மைச் சுற்றி நடந்த சம்பவங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள பின்லாந்து பிரதமர் சன்னா மரின், பொதுக்கூட்டத்தில் கண்ணீர் விட்டுள்ளார்.
பின்லாந்து பிரதமர் 36 வயதான சன்னா மரின் தெரிவிக்கையில், கடந்த வாரம் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தாமும் ஒரு சராசரி பெண் தான் என குறிப்பிட்டுள்ள சன்னா மரின், கடந்த பல நாட்களாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். பிரதமர் மரினின் நண்பரும் மொடலுமான 33 வயது Sabina Särkkä என்பவரின் மேலாடை இல்லாத புகைப்படம் ஒன்று வெளியாகி, பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் அலுவலகத்தில் நடந்த விருந்து கொண்டாட்டத்தின் போதே குறித்த புகைப்படமானது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், Sabina Särkkä பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதுடன், அத்தகைய சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.
@getty
இரவு விடுதி ஒன்றில் நண்பர்களுடன் சன்னா மரின் பாடல் பாடுவதும் நடனமாடுவதுமான காணொளி ஒன்று வெளியான பின்னர் குறித்த மேலாடையற்ற புகைப்படம் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு காரணமானது.
தெற்கு பின்லாந்து நகரமான லத்தியில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் சன்னா மரின், தனது தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டார்.
@shutterstock
மேலும், நான் எனது வேலையை பார்க்க வேண்டும், இந்த நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மரின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதமர் மரினுக்கு ஆதரவாக சில பெண் அரசியல்வாதிகளும் களமிறங்கியதுடன், விருந்தில் கலந்துகொள்வது போன்றும் நடனமாடுவது போன்றும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டனர்.