உதயநிதி பிரச்சாரம் செய்ய அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் கூறிய பதில்
உதயநிதி பிரச்சாரம் செய்ய அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் பதில் அளித்துள்ளார்.
சந்தானம் பதில்
நடிகர் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் மே 16-ம் திகதி வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவுடன் காமெடி நடிகராக மீன்டும் சந்தானம் நடிக்கவுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள கிரானா மலை ஏன் அவ்வளவு முக்கியம்? இந்த மலை மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதா
இந்நிலையில், சிம்புவுக்காக காமெடி நடிகராக மீண்டும் நடிப்பது போல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அழைத்தால் செல்வீர்களா என்று சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "அரசியலில் யார் கூப்பிட்டாலும் ஒரு விடயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் உழைத்தால் எனக்கு சாப்பாடு, நீங்கள் உழைத்தால் உங்களுக்கு சாப்பாடு.
நட்பு ரீதியாக எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்ய கூடாது என்று இருக்கிறது. அதேபோல, சிம்புவுடன் காமெடி நடிகராக நான் மீண்டும் நடிப்பதால் அந்த சுதந்திரத்தை அவர் எனக்கு கொடுத்திருக்கிறார்.
உதயநிதி சார் அழைத்தால் என்னால் இதெல்லாம் முடியும், முடியாது என்று கூறுவேன். அவருக்கு ஒ.கே என்றால் கண்டிப்பாக பிரச்சாரம் செய்வேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |