கடைசி பந்துவரை போராடிய சான்ட்னர்: நியூசிலாந்தை நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் 53 ஓட்டங்கள்
ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் ஷாய் ஹோப் (Shai Hope) 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 13 (12) ஓட்டங்களிலும், டிம் ராபின்சன் 27 (21) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
போராடிய சான்ட்னர்
அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க, அணித்தலைவர் மிட்சேல் சான்ட்னர் (Mitchell Santner) தனியாளாக வெற்றிக்காக போராடினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், நியூசிலாந்து அணியால் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 
இதனால் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுக்க, மேற்கிந்திய தீவுகள் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சான்ட்னர் ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 55 ஓட்டங்கள் விளாசினார். இதில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் ஜேடன் சீல்ஸ், ரஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |