ரோஹித் டக்அவுட், கோலி 1 ரன்னில் கிளீன் போல்டு! சூறையாடிய பவுலர்..156க்கு சுருண்ட இந்திய அணி
நியூசிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ரோஹித் ஷர்மா டக்அவுட்
புனேயில் நடந்து வரும் டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ஓட்டங்கள் எடுத்ததைத் தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 9 பந்துகளை எதிர்கொண்ட அணித்தலைவர் ரோஹித் ஷர்மா டக்அவுட் ஆனார்.
பின்னர் வந்த சுப்மன் கில் 30 ஓட்டங்களில் சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் சாண்டனர் ஓவரில் கிளீன் போல்டு ஆனார்.
அதனைத் தொடர்ந்து சர்பராஸ்கான் (11), அஸ்வின் (4) ஆகியோரும் சாண்டனர் பந்துவீச்சில் நடையைக் கட்டினர்.
சாண்டனர் 7 விக்கெட்
ஓரளவு நின்று ஆடிய ரவீந்திர ஜடேஜா 46 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது lbw ஆகி வெளியேறினார்.
கடைசி விக்கெட்டாக பும்ரா ஆட்டமிழக்க, இந்திய அணி 156 ஓட்டங்களுக்கு சுருண்டது. மிட்செல் சாண்டனர் 53 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |