யார்க்கின் டச்சஸ் சாரா பெர்குசனுக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை!
இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவி சாரா பெர்குசனுக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு
பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினரும், தொலைக்காட்சி ஆளுமை மற்றும் பிரித்தானிய எழுத்தாளருமான சாரா பெர்குசனுக்கு (டச்சஸ் ஆஃப் யார்க்) மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது 63 வயதாகும் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவி சாராவுக்கு மோமோகிராமிற்குப் பின்னர் இது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு மத்திய லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என அவரது நண்பர்களின் கூற்றுப்படி தெரிய வந்துள்ளது.
Getty Images
அவர் பல நாட்களாக மருத்துவமனையில் இருந்ததாக நம்பப்படும் நிலையில், இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், சாரா தனது குடும்பத்தினருடன் வின்ட்சருக்கு திரும்பியுள்ளதாக The sun தெரிவித்துள்ளது.
குடும்பத்தினருடன் ஓய்வு
சாரா பெர்குசனின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'சமீபத்தில் வழக்கமான மோமோகிராம் ஸ்கிரீனிங்கில் கண்டறியப்பட்ட சாரா பெர்குசனின் மார்பக புற்றுநோயின் ஆரம்ப வடிவம் கண்டறியப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது, அது வெற்றிகரமாக நடந்துள்ளது.
டச்சஸ் சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுகிறார். முன்கணிப்பு நன்றாக இருப்பதாக அவரது மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளனர். அவர் இப்பொது தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார்' என தெரிவித்துள்ளார்.
Lou Rocco/ABC via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |