மோசமான நபரை சந்திக்க மகள்களை அழைத்துச் சென்ற இளவரசர் மனைவி: புதிய சர்ச்சை
பிரித்தானிய மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது மனைவியும் சர்ச்சையில் சிக்கியுள்ள விடயம் அவர்களுக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள மற்றொரு செய்தியால், தம்பதியரின் பிள்ளைகளுக்கும் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர் மனைவி செய்த மோசமான செயல்
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது. அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

அந்த சர்ச்சைகளே எப்போது முடியும் என தெரியாத நிலையில், தற்போது புதிதாக ஒரு செய்தி வெளியாகி கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆம், இப்படி ஆண்ட்ரூவும் சாராவும் சர்ச்சையில் சிக்கியதால், பாவம் அவர்களுடைய பிள்ளைகள் என மக்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, சாரா தன் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியையும் அழைத்துக்கொண்டு அந்த மோசமான ஜெஃப்ரி எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009ஆம் ஆண்டு எப்ஸ்டீன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, அவரது விடுதலையைக் கொண்டாடுவதற்காக சாரா தனது இரு மகள்களையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றதாக தனது சட்டத்தரணிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார் எப்ஸ்டீன்.

சாரா நியூயார்க்கில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்திருந்தார் என்று தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள எப்ஸ்டீன், எனது விடுதலையைக் கொண்டாட முதலில் வந்தவர் சாராதான். அவர் தன் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

அவருடன் வந்த பொலிசார் ஒருவர் எனது முன்னறையில் அமர்ந்திருந்தார். சாரா தனது தொண்டு நிறுவனங்களுக்கு உதவுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார் என்றும் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார் எப்ஸ்டீன்.
ஆக, ஆண்ட்ரூவும் சாராவும் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததால் மக்கள் அவர்கள் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில், தம்பதியரின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி குறித்து மக்கள் கவலை அடைந்திருந்தார்கள்.

ஆனால், இப்போது அவர்களும் எப்ஸ்டீனைக் காணச் சென்றது தெரியவந்துள்ளதால், மக்கள் மன நிலை மாறக்கூடும். ஒருவேளை அவர்களுக்கும் சிக்கல் உருவாகலாம் என கருதப்படுவதால் சாரா கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |