தலைமறைவாக வாழ்ந்துவரும் சாரா... 7 மாதங்களுக்குப்பின் கமெராவின் கண்களில் சிக்கினார்
பிரித்தானிய மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூ ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தங்கியிருந்த அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசன் தலைமறைவானார்.

இந்நிலையில், ஏழு மாதங்களுக்குப் பின் அவர் கமெராவின் கண்களில் சிக்கியுள்ளார்!
தலைமறைவாக வாழ்ந்துவரும் சாரா...
ஆம், ஆஸ்திரியா நட்டிலுள்ள ஆடம்பர பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் தலைமறைவாக வாழ்ந்துவருகிறார் சாரா.

ஆளே அடையாளம் தெரியாதவகையில், பேண்ட் சர்ட் அணிந்து, தலையில் தொப்பி ஒன்றை அணிந்தபடி அவர் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் சாராவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க சாராவுக்கு அழைப்பு விடுத்துவருகிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.

ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாமலே இருந்துவந்தது.
இந்நிலையில், மாயமான சாரா தற்போது ஆஸ்திரியா நாட்டில் தங்கி இருப்பது, சுமார் 200 நாட்களுக்குப் பின் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |