பிரித்தானிய பூங்காவில் கிடந்த மனித எச்சம்! அடையாளத்தை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட மனித உடல் எச்சம்
பிரித்தானியாவின் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத மனித உடல் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் Croydon-னில் நியூ அடிங்டனில்(New Addington) உள்ள ரவுடவுன் ஃபீல்ட்ஸில்(Rowdown Fields) கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சம் 38 வயதான சாரா மேஹூவின்(Sarah Mayhew) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 44 வயதான ஆண் மற்றும் 48 வயதான பெண் என இரண்டு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்களை தடுப்பில் வைத்து விசாரணை செய்து வருவதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |