சசிகலாவுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்-ராதிகா சந்திப்பு! ஏதற்காக?
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சசிகலாவை சந்தித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின் தியாகராய நகரில் உள்ள வீட்டிற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர்.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார், நன்றி மறப்பது நன்றன்று, அந்த அடிப்படையில் சசிகலா உடல்நிலை குறித்து விசாரிக்கவே நான் அவரை சந்தித்தேன்.
10 ஆண்டுகளுக்கு மேலாக நான் அதிமுக கூட்டணியில் இருந்துவருகிறேன்.ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை சந்திக்கும் போது சசிகலா உடனிருந்தார்.
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உடல் நலன் குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தோம் என கூறினார்.
தனியரசு, கருணாஸ் என்று இன்னும் பலர் சசிகலாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
