கொரோனா முடிந்தவுடன் நான் மீண்டும் வாரேன்! கட்சியை காப்பாத்திடலாம்..பயப்படாதீங்க: தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ லீக்
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தனது ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சமீபத்தில் விடுதலையாகி தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய இவர், திடீரென்று தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
அதன் பின் இவர் இல்லாமல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தோல்வியடைந்தது. இந்நிலையில், சசிகலா, தன்னுடைய ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Alleged #audio clip of late #TamilNadu CM #Jayalalithaa’s close aide #Sasikala and one of #Aiadmk cadres Lawrence a voice has been doing the rounds on #socialmedia. She is reportedly heard saying, “Don't worry. We will restore the party.” Is #sasikala set to return to politics?” pic.twitter.com/6HcWZDLqEH
— Pratiba Raman (@PratibaRaman) May 29, 2021
அதில், நான் திரும்ப வந்துடுவேன். ஒன்னும் கவலப்படாதிங்க. கண்டிப்பா கட்சியை சரிபண்ணிடலாம். கொரோனா நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. எல்லாம் ஜாக்கிரதையா இருங்க என்று கூறுகிறார்.
இதனால் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவது என்பது உறுதியாகியுள்ளது. ஏனெனில் அவர் முந்தைய அறிவிப்பிலே ஒதுங்குகிறேன் என்று தான் கூறினாரே தவிர, விலகுகிறேன் என்று கூறவில்லை என்பதால், நிச்சயம் சசிகலா இந்த முறை அரசியல் குறித்து தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.