மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா! அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் கிளம்பியதால் பரபரப்பு
பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக சசிகலா பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து சசிகலா முழுவதுமாக மீண்டார். இதையடுத்து சற்று முன்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் அவர் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏனெனில் அதிமுகவில் சசிகலா உறுப்பினர் கூட கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
மேலும் அவர் சார்பில் தான் டிடிவி தினகரன் அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
அதன்படி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா, அதிமுகவின் கொடி கட்டப்பட்ட காரில் அங்கிருந்து சென்றது பேசுபொருளாகி உள்ளது.
