சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்: அதிர்ச்சியில் உறவுகள்
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வரும் 27-ஆம் திகதி விடுதலையாகும் நேரத்தில், அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் அங்கிருக்கும் பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது நடத்தப்பட்ட Rt-Pcr சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.