சசிகலா என்னை அதிமுக-வில் அறிமுகப்படுத்தினார்... நம்பவைத்து கழுத்தறுத்த எடப்பாடி: விலகினார் கருணாஸ்
அதிமுக-வின் கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தூர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் அனைத்து கட்சிகளும் இறங்கிவிட்டன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த முக்குலத்தூர் புலிப்படை அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், திமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்திய காரணத்தினால் புறம்தள்ளி விட்டனர். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்.
கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். வன்னியருக்கு இடஒதுக்கீடு தேர்தல் ஆதாயத்திற்காக தந்து மற்ற சமுதாய மக்களிடம் விரோதம் ஏற்படுத்தி கொண்டது
அதிமுக. முக்குலத்தோர் கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றவில்லை, அதுமட்டுமின்றி மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதாக கூறி, அதுவும் ஏமாற்றிவிட்டது என்று கூறினார்ர்.
யாருடன் கூட்டணி - கருணாஸ் விளக்கம்! https://t.co/cCjYRylUrd
— Sun News (@sunnewstamil) March 6, 2021