வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்! நாளை நடக்கவிருக்கும் தேர்தலில் ஓட்டு போட முடியாத நிலையில் சசிகலா! என்ன காரணம்?
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் அவர் நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போயஸ் இல்லைம் முகவரி மூலம் ஆயிரம் விளக்கு தொகுதியில் சசிகலா வாக்கு செலுத்தி வந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டு போயஸ் இல்லம் தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த முகவரியின் மூலம் வாக்கு செலுத்தி வந்த சசிகலாவின் பெயர் வாக்களார் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம் பற்றி தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
எப்படி, எந்த காரணத்துக்காக சசிகலா பெயர் நீக்கப்பட்டது என்று தெரியவில்லை என தேர்தல் அதிகாரி தெரிவித்ததாகவும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் குறித்த விவரங்களை கேட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா செய்திகளைப்
