சசிகலா பதிலளிக்க வேண்டும்! நீதிமன்றம் அளித்துள்ள முக்கிய உத்தரவு
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவுக்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராகத் டிடிவி தினகரனையும் அதிமுகவினர் தேர்ந்தெடுத்தனர்.
சசிகலாவும், தினகரனும் அதிமுக நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தப் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடுத்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரவி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சசிகலா தொடுத்த வழக்கை நிராக்கக் கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.