இதைச் செய்தால் அதிமுக மீண்டும் கடலாகும்., சசிகலா கருத்து
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் எதிர்காலம் குறித்து முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
புதன்கிழமையன்று கூடிய 17-வது சட்டமன்ற கூட்டத்தில், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் கொண்டுவந்தார்.
வாக்கெடுப்பில் தவெக அரசு தொடர்வதற்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்மூலம், முதல்வர் விஜய்யின் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.
தவெக அரசுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவித்தவர்களில் 25 பேர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி, TVK-விற்கு ஆதரவு தெரிவித்த 26 முக்கிய நிர்வாகிகளை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் S.P. வேலுமணி மற்றும் C.V. சண்முகம் ஆகியோர் அடங்குவர். இவர்களுடன் பல மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால், கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, “அண்ணா திராவிட முன்னேர்ரக் கழகத்தை மீண்டும் வலுவான கட்சியாக மாற்ற வேண்டுமெனில், நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இதைச் செய்தால், அதிமுக கடல் போல பெருகும்” என்று கூறியுள்ளார்.
கட்சியின் தற்போதைய நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள சசிகலா, “இன்று அதிமுக பல்வேறு பிரிவுகளாகச் சிதறி உள்ளது. ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், மக்கள் மீண்டும் நம்பிக்கை கொள்வார்கள். அப்போது, ஜெயலலிதாவின் கனவு நிறைவேறும்” என அவர் கூறினார்.
அவர் மேலும், “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை மீண்டும் மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். அதற்காக, தனிப்பட்ட விருப்பங்களை விட்டு, பொதுநலனுக்காக செயல்பட வேண்டும். அதிமுகவின் அடிப்படை வலிமை மக்கள் ஆதரவு. அதை மீண்டும் பெறுவது நமது கடமை” என்று வலியுறுத்தியுள்ளார்.
சசிகலா, தற்போதைய தலைமைக்கு நேரடியாக விமர்சனம் செய்யாமல், ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். “நாம் அனைவரும் ஒன்றுபட்டால், அதிமுக மீண்டும் கடலாகும். அப்போது, நான் எடுத்துச் சொன்னால் ஜெயலலிதா என்னைக் கேட்பார்” என்ற அவரது கூற்று, கட்சிக்குள் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AIADMK-யின் எதிர்காலம் குறித்து சசிகலா எடுத்துரைத்த கருத்துகள், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Sasikala #AIADMK #TamilNaduPolitics #Jayalalithaa #ADMKUnity #PoliticalNews