சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதிக்கு இன்று வருகை தந்த சசிகலா! எதற்காக தெரியுமா?
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு இன்று சசிகலா வருகை தந்துள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா தான் தீவிர அரசியலில் இறங்குவேன் என கூறியிருந்தார்.
இதன் காரணமாக அதிமுகவை அவர் கைப்பற்றுவாரா என்ற விவாதம் எழுந்தது. இதனிடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது முடிவை மாற்றி கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை தியாகராஜ சுவாமி கோவிலுக்கு காரில் வந்த சசிகலா முருகன், விநாயகர், வட்டப்பாறை ஆதிபுரீஸ்வரர் சன்னதிகளில் வழிபட்டார். பின்னர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.