சசிகலா கண்டிப்பாக முதல்வர் ஆவார்! அப்போ தமிழர்கள் என்னை நினைப்பார்கள்: 30 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த சித்தர்
சசிகலாவின் விடுதலை, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது நடக்கும் சூழ்நிலைகள் குறித்து, 30 ஆண்டுகளுக்கு முன்பே வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் எழுதியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பின் சில தினங்களுக்கு முன்பு விடுதலையானார்.
விடுதலையான அவர் தமிழகம் திரும்பிய போது, அவர் வந்த காரில் அதிமுக கொடி மற்றும் நான் யாருக்கும் அடங்கமாட்டேன், அதிமுக-வை மீட்டெடுப்பேன் என்று சசிகலா கூறியுள்ளதால், அதிமுக-வினரிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியிருந்தாலும், இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக விளங்கிய வலம்புரி ஜான் என்பவர் வார்த்தைச் சித்தர் என்று அழைக்கப்பட்டவர்.
இவர், 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்ற சமயத்தில் நக்கீரன் வார இதழில் வணக்கம் என்ற பெயரில் தொடர் ஒன்றை எழுதினார்.
இதையடுத்து தற்போது, ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு வலம்புரி ஜானின் கட்டுரைகள் வைரல் ஆக பரவி வருகிறது.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையான இந்த நேரத்தில் மீண்டும் அந்த கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன. அதில் சிலவற்றை பார்ப்போம்.
சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத்தான் இருக்கிறார்.
ஜெயலலிதாவின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெயலலிதா உடன் சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர்.
நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெயலலிதாவின் பார்வையில் படாமல் துரத்தினர்.
ஜெயலலிதாவை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, 36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார் என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.
இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம்.
தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர்.
இந்த சசிகலா, எம்.ஜி.ஆர். ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல, சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும், அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார் என்று அதில் சசிகலா நடராஜன் குறித்துக் கூறியிருந்தார் வலம்புரி ஜான்.
ஒரு நடிகையாக இருந்து தனது சக குருவின் அரசியல் வாழ்வில் இணைந்து ஜெயலலிதா இன்று தமிழகத்தின் முதல்வராக ஆனதையே நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இருக்கிறோம்.
ஆனால் ஜெயலலிதா முதல்வரானது கூட அதிக ஆச்சர்யம் அடையவேண்டிய விஷயமில்லை. திறமையான நிர்வாகி, படிப்பாளி, ஒரு கட்சியில் பெருந்தலைகளுடன் போராடி இந்த இடத்திற்கு வந்தார்.
ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று. இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் நடந்தே தீரும்.
நான் இதைச் சொல்வதால் என்னை பைத்தியக்காரன் என்று கூட சொல்லலாம். ஆனால் தனது பலஹீனங்களை எல்லாம் பலமாக்கிக்கொண்டு ஜெயலலிதா ஒருநாள் முதல்வரானதுபோல், அவருடைய நிழலாகவே இருக்கிற சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அதற்கான பால பாடங்களை ஜெயலலிதாவிடமிருந்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார்.
சசிகலா முதல்வராவதற்கு இன்று ஜெயலலிதாவால் விரட்டி விரட்டி அடிக்கப்படும் நடராஜனே முக்கிய பங்கு வகிப்பார். தமிழகம் இந்த துயரையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். அப்படி ஒருநாள் வரும்போது என்னை நினைத்துப் பார்ப்பார்கள் தமிழர்கள் என்று எழுதியிருக்கிறார்.
தற்போது இருக்கும் சூழ்நிலையிலும், இவரின் வார்த்தைகளும் வைத்து பார்க்கும் போது, சசிகலா முதல்வர் ஆவதற்கு ஏகப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. அப்போது வார்த்தை சித்தர் சொன்னது இப்போது பலிக்குமா என்று பார்ப்போம்.


