சதிகாரர்கள் கூட்டத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்வார் சசிகலா! தேர்தல் பிரச்சாரத்தில்... வெளியான அதிரடியான கட்டுரை அறிக்கை
தமிழகத்தில் சசிகலா ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி அமைக்கும் வேலை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில், நமது எம்.ஜி.ஆரில் வெளியாகியுள்ள கட்டுரையில், சசிகலாவுக்கு தொண்டர்கள் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரும் அரணாக நிற்பதால், அவரது எழுச்சியை நசுக்குவதற்கு நச்சு கும்பல் ஒன்று சசிவலைகளை பின்னியிருக்கிறதாம். அதனை கண்டு ஒருபோதும் அஞ்சவும் மாட்டார்.
பயந்து விலகவும் மாட்டார். துணிவின் சிகரம் சசிகலா. தீயசக்தி கூட்டத்துக்கு சதிகாரர்கள் கூட்டத்துக்கு ஏப்ரல் 6-ம் திகதி நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலே கடைசி தேர்தல் என்பதை செயலாக்கி காட்டுவதோடு அத்தகைய கூட்டத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்வார்.
சசிகலா தலைமையில் ஆட்சி அமைந்தே தீரும். அதற்கான களத்தை சரியான வியூகத்துடன் அமைத்து உறுதியுடன் பணியாற்றி வெற்றியை நிலை நாட்டுவார்.
தமிழகத்தில் சசிகலாவின் அலை வீசத் தொடங்கிவிட்டதை காணமுடிகிறது. தமிழக மக்களின் எண்ணங்களை, தேவைகளை நன்றாக அறிந்து அதனை செய்து தரக்கூடிய ஒரே தலைவர் இன்றைக்கு இவர்தான் என்ற உறுதி மக்களிடையே திடமாக ஏற்பட்டுள்ளது. சசிகலாவோடு தோளோடுதோள் நிற்க, அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வாருங்கள் என கூறப்பட்டுள்ளது.