சசிகலா அதை எல்லாம் பார்த்துகுவாங்க! படு குஷியில் ஸ்டாலின்: கலக்கத்தில் அதிமுக?
திமுக தலைவர் ஸ்டாலின் சசிகலாவின் வருகையால் படு குஷியில் இருப்பதாகவும், நிச்சயம் இந்த முறை நமக்கு தான் வெற்றி என்ற நினைப்பிலும் இருக்கிறாராம்.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின் சமீபத்தில் விடுதலையானார்.
அவர் வெளியில் இருக்கும் போது அதிமுக அவர் வசம் இருந்தது. அவர் சிறையில் அடைக்கப்பட்டவுடன், அதிமுக-வில் பலரும் சசிகலாவை தரக்குறைவாக எல்லாம் பேசினார்கள்.
அவரை நிச்சயமாக அதிமுக-விற்கு விடமாட்டோம் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் சசிகலா தான் வெளியே வந்தவுடனே, தன்னுடைய காரில் அதிமுக கொடியை வைத்து ஆட்டத்தை ஆரம்பித்தார்.
இன்னும் என்ன செய்ய காத்திருக்கிறார் என்பது தெரியவில்லையே என அதிமுகவினர் கலக்கத்தில் இருக்கும், திமுக தலைவர் ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
ஏனெனில், சசிகலாவால் அதிமுக-வின் ஓட்டு வங்கி நிச்சயம் பிரியப் போகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களில் சசிகலாவிற்கு நல்ல வாய்ஸ் உள்ளது என்பதால், அதிமுக என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை.
இதனால் அதிமுக-விலே உட்கட்சி பூசல் இருப்பதால், ஸ்டாலின் தொண்டர்களிடம் நாம் எல்லாம் எதுவும் செய்ய வேண்டாம், எல்லாம் சசிகலா பார்த்துப்பாங்க, நாமா ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும், பூத் கமிட்டிகளை ஸ்டிராங் பண்ற வேலையை மட்டும் நீங்க பாருங்க என்று கூறியுள்ளார்.
இதனால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனராம்.
