சசிகலா இதை செய்ய தயங்கமாட்டார்! தொடர்ந்து எடப்பாடி அவரை எதிர்த்தால் இந்த நிலை தான் ஏற்படும்... வெளியான முக்கிய தகவல்
தன்னை உடன் சேர்த்து கொள்ளாமல் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி எதிர்த்து வந்தால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் ஏற்படும் என்பதில் சசிகலா உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைக்கட்ட தொடங்கியுள்ளது.
ஆளும் கட்சியான அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் சீட் தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில் பாஜகவுடன் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
கூட்டணி முடிவாகி ஒப்பந்தத்தில் அமித்ஷா கையெழுத்திடும் நிலை வராததற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
அதாவது, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகி, அதிமுக ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், 16-ஆம் திகதி சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடிய நிலை உருவாகும்.
இல்லையென்றால் இரட்டை இலை முடக்கப்படும் என அமித்ஷா பேசிவிட்டு டெல்லி கிளம்பியிருக்கிறார்.
இதனிடையில் தென் மாவட்டங்களில் அதிமுக ஓட்டுகளை பெற வேண்டும் என்றால் சசிகலாவை சேர்த்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறார்.
அப்படி சேர்க்கவில்லை என்றால் தென்மாவட்டத்துல ஒரு சீட் கூட வராது என்று தங்களிடம் ராஜேந்திரபாலாஜி சொன்னதாக சீனியர் அமைச்சர்கள் எடப்பாடியிடம் கூறியிருக்கின்றனர்.
இதை கேட்டு கோபமடைந்த எடப்பாடி இப்படி அவர் பேசிகிட்டிருந்தால் தொலைத்துவிடுவேன் என கொதித்திருக்கிறார் என கூறுகிறார்கள்.
சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பு இல்லையென்றால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் தயங்க மாட்டார்.
சசிகலாவை தொடர்ந்து எடப்பாடி எதிர்த்தால் மீண்டும் 1989ல் ஏற்பட்ட நிலை ஏற்பட்டு, இன்றைய அதிமுகவே ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர்த்திவிடும் என அவர் தரப்பில் கூறப்பட்டதாக தெரியவந்துள்ளது.