சசிகலாவை சோகமாக்கிய பிரபலத்தின் மரணம்! அப்பாவை இழந்தது போல் உணர்கிறேன் என வேதனை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான தா.பாண்டியன்(89), வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
இதனால் கடந்த 24-ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரக பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தா. பாண்டியனின் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.
இவரின் மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிப்பிற்குரிய தா. பாண்டியன் தந்தையைப் போல என்னிடம் பரிவு காட்டியவர்.
அவரை இழந்தது எனது தந்தையை மீண்டும் இழந்தது போல ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கின்றேன். நான் உடல் நலம் குணமடைந்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய உடன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
அரசியல் பயணத்தில் வெற்றியடைய வாழ்த்து கூறினார். மரியாதைக்குரிய தா. பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கட்சியைச் சேர்ந்த தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
