சசிகலா கையில் எடுக்கும் அஸ்திரம்! 3 மணி நேரம் நடந்த ஆலோசனை: எடப்பாடிக்கு வைக்கப் போகும் செக்
du மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் சசிகலா சுமார் 3 மணி நேரத்திற்கு மேலான ஆலோசனையில் ஈடுபட்டதன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா மிகவும் அமைதியாக உள்ளார். வெளியில் வந்தவுடன் பட்டாசாய் வெடிப்பார் என்று பார்த்தால், மிகவும் பொறுமையாக ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
சசிகலாவின் வருகை அதிமுக-விற்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. சசிகலா அதிமுக-வின் உள்ளே வந்தால், தன்னுடைய முக்கியத்துவம் குறைந்து போகும் என்ற எண்ணத்தில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை அரசாங்க சொத்துகளாக மாற்ற உத்தரவிடப்பட்டிருந்தது.
இது எடப்பாடியாரின் அதிரடி நடவடிக்கை தான் என்று கூறப்பட்டது, இதைத் தொடர்ந்து தற்போது கொடநாடு டீ எஸ்டேட், சிறுதாவூர் பங்களா, ஹைதராபாத் திராட்சை தோட்டம் உட்பட, சசிகலா வகையறாக்களுக்கு தொடர்புடைய ஜெயலலிதாவின் சொத்துகள் மீதும் அடுத்தகட்டமாக கைவைக்க அதிமுக தலைமை ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் எப்படியோ சசிகலாவின் காதுக்கு செல்ல, உடனே சசிகலா ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக்கை, தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அதன் பின் அவரிடம் கிட்டத்தட்ட சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது, தீபக்கிடம் தீபா மூலம் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் படி சசிகலா கூறியுள்ளார்.
அதாவது, தங்களது பூர்வீக சொத்தான போயஸ் கார்டனை எடப்பாடியார் அபகரிக்க பார்க்கிறார் என்று தீபாவை பிரச்சாரம் செய்ய சொல்லியுள்ளாராம்.
ஏற்கனவே இதுசம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீபக்தான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கின் அடிப்படையில் அதை நினைவகமாக மாற்றுவதற்குத் தடை விதித்த நிலையில், அந்த சட்டப்போராட்டத்தை முன்னெடுத்து எடப்பாடிக்கு சசிகலா பதிலடி கொடுக்க நினைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
