அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவின் அடுத்த திட்டம் இது தானாம்! வைரலாகும் புகைப்படம்
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தன்னுடைய ஆன்மீக பயணத்தை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, நான்கு ஆண்டு தண்டனைக்கு பின்னர், தமிழகம் திரும்பினார்.
தமிழகம் திரும்பிய இவர், அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், திடீரென்று சசிகலா சமீபத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும், அது தான் என் நோக்கம் என்று கூறி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இது தினகரன் போன்றோருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தாலும், அதிமுக நிம்மதி பெருமூச்சை விட்டது.
இந்நிலையில், சசிகலா தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
வரும் 15-ஆம் திகதி முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஆனால், நேற்று அமாவாசை என்பதால் நேற்றில் இருந்தே, தனது ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.
இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுடன் சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு அவர் சென்று வழிபாடு செய்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகள் நடத்த சசிகலா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ளதால், இந்த ஆன்மீக பயணம் அவருக்கு நிச்சயம் ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
