Operation Sindoor: பாகிஸ்தானின் அணு ஆயுத கிரானா மலை மீது இந்தியா தாக்கியதா?
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்டும் கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக செயற்கைகோள் படம் வெளியாகியுள்ளது.
கிரானா மலை மீது தாக்குதல்?
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மே 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்த போரின் போது, பாகிஸ்தானின் அணு ஆயுத மையமாக கருதப்படும் கிரானா மலை(kirana hills) மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சர்கோடா மாவட்டத்தில் உள்ளது கிரானா மலை. இந்த மலையின் உள்ளே, பல கட்ட பாதுகாப்பில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கிரானா மலை மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலுக்கு, இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்தது.
செயற்கைக்கோள் படங்கள்
செயற்கைக்கோள் பட நிபுணர் டேமியன் சைமன், கிரானா மலையின் செயற்கைகோள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள கருத்து மீண்டும் அது தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Imagery update from Google Earth of the Sargodha region, Pakistan, captured in June 2025, shows -
— Damien Symon (@detresfa_) July 18, 2025
1 - the impact location of India's strike on Kirana Hills in May 2025
2 - repaired runways at Sargodha airbase post India's strikes in May 2025 pic.twitter.com/BLOXYB9fKP
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கிரானா மலையின் செயற்கைகோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், கிரானா மலைகளில் ஒரு தாக்குதலின் இடத்தையும், சர்கோதா விமான தளத்தில் ஓடுபாதைகளை சரிசெய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழமான தாக்குதலா என பயனர் எழுப்பிய கேள்விக்கு, அங்குள்ள சுரங்கத்திற்கோ, முக்கிய சொத்துக்களுக்கோ எந்த சேதமும் இல்லை. மேலோட்டமான சேதம் தான்.
இந்தியாவின் தாக்குதல் அணுசக்தி உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் முயற்சி இல்லை. மாறாக பாகிஸ்தானுக்கு ஒரு மூலோபாய எச்சரிக்கையை கொடுப்பது தான் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |