உலகின் முதல் satellite இணைப்பு ஸ்மார்ட் போன் வந்தாச்சு! விலை என்ன தெரியுமா?
உலகின் முதல் satellite கனெக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி Huawei நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனை மேட் 50 சீரிஸ் கீழ் அறிமுகம் செய்துள்ளது. Huawei Mate 50 சீரிஸ் இல் மூன்று மொடல்கள் வெளியாகி இருக்கிறது. அது மேட் 50 மற்றும் மேட் 50 ப்ரோ ஆகும். மற்றொன்று RS Porsche டிசைன் பதிப்பாகும்.
மூன்று மொடல் ஸ்மார்ட்போன்களிலும் Snapdragon 8+ Gen 1 SoC சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேட் 50 தொடரில் ப்ரீமியம் மொடலாக இருப்பது மேட் 50 ப்ரோ ஆகும்.
இதில் 10 பிட் வண்ண தெளிவுத்திறன் உடன் கூடிய 6.74-இன்ச் OLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.
gsmarena
இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட்டைக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்தமாக கேமரா தொகுதி என்பது தனித்தனியாக தரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. Mate 50 Pro ஆனது 66 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4700 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது.
மேலும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. பேட்டரி ஆதரவில் சிறப்பம்சம் என்னவென்றால் ஸ்மார்ட்போனில் 1% சார்ஜ் இருந்தாலும் கூட, மூன்று மணிநேரம் வரை போனை காத்திருப்பு நிலையில் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
gsmarena
இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ, ஆரஞ்ச், சில்வர், ப்ளாக் மற்றும் வயலட் வண்ண ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், Beidou Satellite Message 3 நெறிமுறை என அழைக்கப்படும் செயற்கைக்கோள் இணைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது.
செல்லுலார் இணைப்பு இல்லாமலேயே நீங்கள் மெசேஜையும் இருப்பிடத்தை பகிர முடியும். செயற்கைக்கோள் ஆதரவை வழங்கும் உலகின் முதல் பிரபல ஸ்மார்ட்போன் இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை
மேட் 50 ப்ரோ - $980, மேட் 50 - $720, RS Porsche டிசைன் - $1,870
gsmarena