ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் விமானதளத்தில் குண்டுவெடிப்புகள்! சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Raju Aug 12, 2022 05:10 AM GMT
Report

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்திலுள்ள விமான படை தளத்தில் குண்டுகள் வெடித்ததில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

முன்னாள், சோவியத் யூனியனில் இருந்த உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிமியாவில் உள்ள கடற்படை மற்றும் விமான தளங்களையும், ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கடலோர ரிசார்ட்டுகளுக்கு அருகில் உள்ள ரஷ்ய விமானத் தளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் சமீபத்தில் நடந்தது. உக்ரேனிலிருந்து நீண்ட தூர ஏவுகணைகள் அதன் மீது ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=F8-6n4yEdPg

ஆனால் இது சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததால் ஏற்பட்ட சம்பவம் எனவும் தாக்குதலின் விளைவு அல்ல எனவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையில் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுகையில்,கிரீமியாவிலுள்ள சாகி விமான படை தளத்தில் செவ்வாய்க்கிழமை குண்டுகள் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் அந்த விமான தளம் பயன்படுத்த முடியாத நிலைக்கு பாழாகியுள்ளது.

குண்டுகள் வெடித்தபோது, அந்த விமான தளத்தில் போா் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், ராணுவ போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டிருந்தன. அந்தச் சம்பவத்தில், அங்கிருந்த 6 ரஷ்ய விமானங்கள் அழிக்கப்பட்டன என கூறியுள்ளார்.

குண்டுவெடிப்புக்கு முன்னதாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அங்கிருந்த பல போா் விமானங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் விமானதளத்தில் குண்டுவெடிப்புகள்! சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் | Satellite Images Crimea Attack Russia Ukraine

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US