சவுதி அரேபியா நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பேர் உயிரிழப்பு; பதிலடி கொடுத்த ஹூதி
saudi air strike on yemen kills 33 peoples: சவுதி அரேபியா ஏமனில் நடத்திய வான்வழி தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக ஹூதி சவுதியின் விமான நிலையம், எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழப்பு
கடந்த ஜூலை முதல் சவுதி அரேபியா அரசுக்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

ஏமனில் ஹூதியின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவிற்கு கிழக்கே உள்ள அல்ஷரியா கிராமத்தில், சவுதி அரேபியா நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர், 39 பேர் காயமடைந்துள்ளனர் என ஹூதி சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர் Anees Alasbahi தெரிவித்துள்ளார்.
عاجل: ** جرائم العدوان السعودي خلال الـ24 ساعة الماضية ليوم السبت الموافق 7نوفمبر 2026م،** 34شهيدا و49جريحا ضحايا العدوان السعودي خلال 24 ساعة باجمالي 83 شهيدا وجريحا حصيلة أولية **لترتفع الحصيلة التراكمية للشهداء والجرحى
— د. أنيس الاصبحي Dr-Anees Alasbahi (@alasbahi_dr) November 7, 2026
மேலும், மோதல் தொடங்கியதிலிருந்தது இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 724 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹூதி பதிலடி
இதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவை குறிவைத்து, பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தி ஹூதி தாக்குதலை மேற்கொண்டதாக ஹூதியின் இராணுவ செய்தித் தொடர்பாளர் yahya saree தெரிவித்தார்.

முதல் நடவடிக்கையாக தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தையும், சவுதி அராம்கோ எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ஒரு வடிகலன் கோபுரத்தையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் நோக்கங்களை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, சவுதியின் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பகுதியான குரைஸில் உள்ள அராம்கோ வசதிகளையும், நாட்டின் எண்ணெய் போக்குவரத்து உள்கட்டமைப்பின் ஒரு பகுதியான தவாத்மியில் உள்ள நீரேற்று நிலையம் எண் 8-ஐக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
மேலும், நஜ்ரானில் உள்ள சவூதி தேசிய பாதுகாப்புப் படை முகாம் தாக்கப்பட்டதாகவும், ஏமனின் அல்-ஜாவ்ஃப் மற்றும் மாரிப் மாகாணங்களில் சவூதி ஆதரவுப் படைகளைக் குறிவைத்து 2 தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சவூதி தலைமையிலான கூட்டணி செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் Turki Al-Maliki, ரியாத்தை குறிவைத்த ஹூதி ஏவுகணையை சவூதி வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளார்.