அமெரிக்காவில் $1 ட்ரில்லியன் முதலீடு: சவுதி இளவரசர் டிரம்புக்கு வழங்கி உறுதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு பொருளாதார உறவு விரிவாக்கம் மற்றும் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி மரணம் மற்றும் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் $1 ட்ரில்லியன் முதலீடு
டிரம்ப் - சல்மான் சந்திப்பின் முக்கிய அம்சமாக, அமெரிக்காவில் சவுதியின் மிகப்பெரிய முதலீடுகள் குறித்த இளவரசரின் அறிவிப்புகள் அமைந்துள்ளது.
அதாவது அமெரிக்காவில் தற்போது சவுதி மேற்கொண்டு வரும் $600 பில்லியன் முதலீடுகள் முன்னோடியில்லாத வகையில் $1 ட்ரில்லியன் தொகைக்கு உயர்த்தப்படும் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை பாராட்டி மிகச் சிறந்த முடிவு என்று பாராட்டியுள்ளார். மேலும் இந்த நிதி வாக்குறுதிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |