இந்தியா உட்பட 14 நாடுகள் மீது விசா தடை விதித்த சவுதி அரேபியா... வெளியான பின்னணி
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில விசா வழங்கல் நிறுத்தி வைப்பும், புதிய பயணக் கட்டுப்பாடுகளையும் சவுதி அரேபிய அரசாங்கம் விதித்துள்ளது.
பெரும் ஏமாற்றம்
ஹஜ் யாத்திரை காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒருபகுதியாகவே இந்த விசா தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரை முடிவடையவுள்ள ஜூன் மாத நடுப்பகுதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்றே வெளியான தகவலின் அடிப்படையில் தெரிய வருகிறது.
புதிய விதிகளின் அடிப்படையில், உம்ரா விசா, தொழில் ரீதியான விசா மற்றும் குடும்பங்களுக்கான விசா ஆகியவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்களுக்கு சவுதி அரேபியா விசா தடை என்பது பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
முறையாக பதிவு செய்யாமல் ஹஜ் யாத்திரைக்கு புறப்படும் மக்கள் கூட்டத்தை தடுக்கவே இந்த நாடுகளுக்கு விசா தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ளனர்.
மட்டுமின்றி, உம்ரா அல்லது குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு விசா கைப்பற்றும் மக்கள், சட்டத்திற்கு புறம்பாக அதிக நாட்கள் தங்கிவிட்டு புனித மெக்காவில் ஹஜ் யாத்திரைல் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹஜ் யாத்திரை
இந்த நிலையில் சவுதி அரேபியா சுமூகமான மற்றும் பாதுகாப்பான ஹஜ் யாத்திரையை நடத்துவதற்கு விசா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு ஏப்ரல் 13 வரை வருகை விசா அல்லது உம்ரா விசா வழங்கப்படும். அதன் பிறகு, பட்டியலில் உள்ள 14 நாடுகளைச் சேர்ந்த எவருக்கும் புதிய விசா வழங்கப்படாது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்தான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |