குடியிருக்க வீடு, கார் வசதியுடன் வாரத்திற்கு 3,000 பவுண்டுகள்: உலக கால்பந்து வீரர்களுக்கு சவுதி அழைப்பு
சவுதி அரேபியாவின் மூன்றாவது லீக் அணிகளுக்கான புதிய கால்பந்து வீரர்களுக்கு வாரத்திற்கு 3,000 பவுண்டுகள் சம்பளத்துடன் கார் வசதியும் குடியிருப்பும் அளிக்க இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளது.
ஐரோப்பிய கால்பந்து நட்சத்திரங்கள்
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா கால்பந்து விளையாட்டுக்கு என பல பில்லியன் தொகையை முதலீடு செய்து வருகிறது. நட்சத்திர வீரர்களுக்கு பெருந்தொகையை சம்பளமாக அளித்து, ஐரோப்பிய கால்பந்து நட்சத்திரங்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகிறது.
@FutbolJobs_ES
கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரீம் பென்ஸேமா தொடங்கி பல முதன்மையான நட்சத்திரங்கள் சவுதி கால்பந்து அணிகளுக்காக களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், அடுத்தகட்ட கால்பந்து வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சவுதி அரேபியா விளம்பரம் செய்துள்ளது.
திறமையான பல வீரர்கள்
அதாவது சவுதி அரேபியாவின் மூன்றாவது லீக் அணிகளுக்கான வீரர்கள் தெரிவு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வாரத்திற்கு 3,000 பவுண்டுகள் வரையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
@getty
ஆண்டுக்கு 100,000 பவுண்டுகள் ஊதியம் போதுமானதாக இல்லை என்பவர்களுக்கு தங்க குடியிருப்பும் கார் வசதியும் செய்து தர தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விளம்பரத்தின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஊடக வெளிச்சத்திற்கு வராத திறமையான பல வீரர்கள் சவுதி அரேபியாவுக்கு படையெடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |