சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர்கள் நிலம் வாங்க அனுமதி - 2026 ஜனவரியிலிருந்து அமுல்
சவுதி அரேபியா 2026 ஜனவரி முதல் வெளிநாட்டவர்கள் மற்றும் Expat குடியிருப்பாளர்கள் நிலம் மற்றும் வீடுகள் வாங்க அனுமதி வழங்க உள்ளது.
சமீபத்தில் சவுதி அமைச்சரவை இதற்கான புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சட்டம், சவுதியின் Vision 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக அமைகிறது.
இதன் மூலம் எண்ணெய் சார்பு பொருளாதாரத்திலிருந்து விலகி அந்நாட்டு வளர்ச்சியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
யார் யார் நிலம் வாங்கலாம்?
- வெளிநாட்டு தனிநபர்கள்
- நிறுவனங்கள்
- சவுதி குடியுரிமை இல்லாதவர்களும் இதற்குத் தகுதியானவர்களே
எங்கு நிலம் வாங்க அனுமதி உள்ளது?
- ரியாத் (Riyadh)
- ஜித்தா (Jeddah)
- பிற பகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும்
மேக்கா மற்றும் மதீனாவில் அனுமதி கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும், காரணம் அந்த இடங்களின் மத புனிதத்துவம். முழுமையான விதிமுறைகள் விரைவில் வெளியாகும்.
எப்போது அமுலுக்கு வரும்?
இந்த சட்டம் 2026 ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும். அதற்கு முன், முழுமையான விதிமுறைகள் மற்றும் அனுமதியுள்ள இடங்கள் குறித்து அறிக்கை “Istitlaa” இணையதளத்தில் வெளியிடப்படும். மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
எந்த துறைகளுக்கு லாபம்?
- வீடு மற்றும் நில சந்தை
- கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு
- வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன்
- சிமெண்ட் மற்றும் கட்டிடப் பொருட்கள்
இந்த அறிவிப்புக்குப் பிறகு, தடாவுல் பங்குசந்தையில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
வெளிநாட்டு வாசிகள் என்ன செய்யலாம்?
- அதிகாரபூர்வ விதிமுறைகளை காத்திருக்கவும்
- “Istitlaa” தளத்தில் முறைப்படி அப்டேட்களை பின்தொடரவும்
- முன்பதிவு செய்யும் திட்டங்களை கவனிக்கவும்
எதிர்காலப் பார்வை:
2002-இல் துபாய் வெளிநாட்டவர்களுக்கு நிலம் வாங்க அனுமதியளித்ததில், அதன் பொருளாதாரம் வளர்ந்தது.
அதுபோல் சவுதி தற்போது அதே வழியை பின்பற்றி ரியாத், ஜித்தா போன்ற நகரங்களை உலகளாவிய முதலீட்டுப் பகுதிகளாக மாற்ற விரும்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Saudi real estate for foreigners, Expats buying property in Saudi, Vision 2030 Saudi Arabia, Saudi property law 2026, Foreign investment in Riyadh Jeddah