கலவர பூமியான சூடான்., சவுதி அரேபியா விமானம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல்
சூடானிலிருந்து சவுதி அரேபியாவிற்கு புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் மீதி நேற்று (சனிக்கிழமையன்று) துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதலில் 25 பேர் உயிரிழந்ததாகவும்ம் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படையும் சனிக்கிழமை மோதின. இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சூடான் மோதலில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்!
@airplusnews
இந்நிலையில், கார்டூம் விமான நிலையத்தில் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பயணிகளுடன் ரியாத்துக்குப் புறப்பட்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம் சேதமடைந்துள்ளது. கேபின் குழுவினர் மற்றும் மற்றவர்கள் சூடானில் உள்ள சவுதி தூதரகத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளதாக சவுதியா ஓரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பல நாடுகள் சூடானுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன.
Getty Images
#BREAKING: Coup in Africa's 3rd Largest Country
— Mario Nawfal (@MarioNawfal) April 15, 2023
Sudan's RSF forces have taken control of the presidential palace & airport.
Sudan has gone through decades of civil war killing millions.
Stories like this make all issues we face in the Western World seem like 'nothing burgers' pic.twitter.com/ZUYUuyi3U6