சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்: சேதத்தை விவரித்த செயற்கைக்கோள் படங்கள்
சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்
கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த அத்துமீறிய ஏவுகணை தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் இரண்டு பேர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த ஏவுகணை தாக்குதலானது எண்ணெய் குழாய் கட்டமைப்பின் பம்பிங் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக வெளிவந்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், ஒரு பம்பிங் நிலையத்தில் தீவிரமான தீ சேதமும், மற்றொரு பம்பிங் நிலையத்தில் சிறிய தீ சேதமும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு யார் பொறுப்பு?
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலானது நடைபெற்றுள்ளது.

ஆனால் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்றதாக தெரியவரவில்லை.
மேலும் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடுகளும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் ஈராக்கில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |