அதிகரிக்கும் பிச்சைக்காரர்கள் நுழைவு: பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை!
பாகிஸ்தானில் இருந்து பிச்சைக்காரர்கள் அதிக அளவில் நாட்டுக்கு ஊடுருவி வருவதாக பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
பாகிஸ்தான் நாட்டிலிருந்து அதிகரித்து வரும் பிச்சைக்காரர்கள், சமய யாத்திரை என்ற போர்வையில் நாட்டுக்குள் நுழைந்து வருவதாக சவுதி அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த போக்கு, சட்டபூர்வமான பாகிஸ்தான் உம்ரா மற்றும் ஹஜ் யாத்திரையாளர்களின் சமய சுற்றுலா அனுபவத்தை பாதிக்கக்கூடும் என்று சவுதி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் செய்தித்தாளின் தகவலின்படி, சவுதி ஹஜ் அமைச்சகம், பாகிஸ்தான் சமய விவகார அமைச்சகத்திடம், உம்ரா விசாக்கள் மூலம் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் சமய விவகார அமைச்சகம், உம்ரா பயணங்களை எளிதாக்கும் பயண நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி, சட்டரீதியான மேற்பார்வையின் கீழ் கொண்டு வரும் "உம்ரா சட்டத்தை" அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
90 சதவீதம் பேர்
கடந்த மே மாதம் சவுதி அரசாங்கம் அனுமதி இல்லாமல் ஹஜ் செய்வதை தடை செய்யும் ஒரு சட்டத்தை வெளியிட்டது. அதில் 10,000 ரியால்கள் (சுமார் ரூ. 2.22 லட்சம்) அபராதமும், மீறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கடந்த ஆண்டு வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |