எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்கிய சவுதி அராம்கோ
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ, நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு ராஸ் தனுரா துறைமுகத்தில் எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது.
கப்பல் தரவுகளின்படி, இரண்டு VLCC (Very Large Crude Carrier) கப்பல்கள் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன. மேலும் ஒரு கப்பல் அருகில் காத்திருக்கிறது. ஒவ்வொரு VLCC-க்கும் 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் ஏற்றும் திறன் உள்ளது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அராம்கோ மீண்டும் ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.

சமீபத்தில், தைவானின் Evergreen Marine கப்பல் ஹார்முஸ் நீரிணையில் தாக்குதலுக்குள்ளானது. இதனால், பிரித்தானிய கடற்படை தற்காலிகமாக கப்பல்களை பாதுகாப்பு அளிப்பதை நிறுத்தியது.
ராஸ் தனுரா, சவுதி அரேபியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. போருக்கு முன்பு தினசரி 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போபோர் தொடங்கிய பிறகு துறைமுகம் மூடப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களில் சவுதி எண்ணெய் ஏற்றுமதி 70 லட்சம் பீப்பாயிலிருந்து 40 லட்சம் பீப்பாயாக குறைந்தது. இப்போது, சவுதி அராம்கோ, ஆகஸ்ட் மாதத்திற்கான எண்ணெய் விலையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஈராக், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஏற்கனவே தங்கள் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன.
அமெரிக்கா தற்காலிகமாக தடையை நீக்கியதால், ஈரானும் தனது எண்ணெய் ஏற்றுமதியை விரைவாக அதிகரித்து வருகிறது.
உலகளாவிய எண்ணெய் விலை, சவுதி ஏற்றுமதி மீண்டும் தொடங்கியதால், பீப்பாய் ஒன்றுக்கு 1 டொலர் அளவிற்கு குறைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |